“நாங்கள் கேட்டதே இல்லை” : குமுறும் அரசு ஊழியர்கள்!

Published On:

| By Kavi

 Dont make government employees debtors

தமிழக சட்டப்பேரவையில்  முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  பண்டிகை கால முன்பணம் உயர்வு,  சரண் விடுப்பு,  அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்வு,   திருமண முன் பணம் தொகை என 9 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. Dont make government employees debtors 

எங்கள் கோரிக்கை எங்கே… Dont make government employees debtors

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி இன்று (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில்,  “முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் பெரும்பாலும் கடன் சார்ந்த விசயங்களாகவே உள்ளன. பெறப்படும் கடன் (முன்பணம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும் சூழலில் இவைகளைப் பெரிய அறிவிப்பாக அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு மூன்றாவது முறையாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்து எதையும் தெரிவிக்காத தமிழக முதல்வர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அறிவிப்புகளுக்கு மட்டும் ஆண்டொன்று இவ்வளவு செலவாகிறது எனக் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது. Dont make government employees debtors

சொற்ப ஓய்வூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியத்தை ரூ.2000/-லிருந்து ரூ.6750/- உயர்த்தி வழங்கக் கேட்டு தள்ளாத வயதில் அவர்கள் போராடினால், கஞ்சிக்கே வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்திக் கொள்வார்களாம். நன்றாக இருக்கிறது இவர்களின் நியாயம்” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும்,  “திமுக-வின் தேர்தல் கால வாக்குறுதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்பது. ஆனால் அதை அறிவிக்காமல், மூன்று வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அதற்கென ஒரு குழுவை அமைத்து, அறிவிப்பு வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆகியும் அதற்கான அரசாணையை பொதுவெளியில் வெளியிடாமல், சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒன்பது மாதம் என்பதை எட்டு மாதமாக குறைத்ததாகச் சொல்வது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல். குழுவை அமைத்திருப்பது தேவையற்றது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு பழைய ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும் என்பது தான்.

அதே போல் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற 39,000-திற்கு மேற்பட்டவர்களுக்கும், பணியிடையே மரணமடைந்த 7000-திற்கும் மேற்பட்டவர்களுக்கும் பணிக்கொடை தொடர்பாகவோ அல்லது குடும்ப ஓய்வூதியம் தொடர்பாகவோ எந்த அறிவிப்புமில்லை.

தமிழ்நாட்டில் அரசுப் பணியிலிருந்து இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் முதன் முதலில் திமுக ஆட்சியில் அரசாணை எண். 225 (தொழிலாளர் துறை), நாள் 15.02.1972 மூலம் 1972-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்றதும் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25%-லிருந்து 5%-ஆக குறைந்து அரசாணை வெளியிட்டது. மீண்டும் 25%-ஆக உயர்த்தி வழங்கக் கேட்டு கோரிக்கை வைத்தோம். அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

Dont make government employees debtors

அரசாணை எண்.33-ன்படி சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனம் இனி வருங்காலங்களில் கிடையாது என இந்த ஆட்சியில் ஆணை வெளியிடப்பட்டது.

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வருவாய் துறை மானியக் கோரிக்கையின் போது கிராம உதவியாளர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளித்து ஆணை பிறப்பித்திருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். Dont make government employees debtors

குலக்கல்விக்கு எதிராக சமூக நீதி, திராவிட மாடல் என பேசிவரும் ஆட்சியாளர்கள் தற்போது அரசாணை எண்.184-ன்படி கிராம உதவியாளர் பணியிலிருந்து இறந்தால் அவர்களின் வாரிசுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணிநியமனம் இல்லையாம். கிராமஉதவியாளரின் மகன்/மகள் கருணை அடிப்படையில் கிராம உதவியாளராக மட்டுமே நியமிக்கப்படுவார் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது மிகக் கொடுமையாக உள்ளது.

ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்புற நூலகர், ஊராட்சி செயலாளர், மக்கள் நலப் பணியாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர், காசநோய் தடுப்பு ஊழியர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர், தூய்மைப் பணியாளர் மற்றும் தூய்மைக் காவலர், குடும்ப நல ஆலோசகர், கணினி இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டு வருவது தொடர்பாக அறிவிப்பு ஏதுமில்லை.

மகளிர் உரிமையை நிலைநாட்டும் அரசு என தெரிவிக்கும் இந்த அரசு மகப்பேறு விடுப்பில் சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக ஏதும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. சரண் விடுப்பைப் பொருத்தளவில் இந்த நாடகம் நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

மொத்ததில் 110-விதியின் கீழ் தமிழக முதல்வரின் அறிவிப்பு அரசு ஊழியர்களைக் கடனாளியாக்குவது எப்படி என்பதாகத் தான் பார்க்கிறோம். அறிவிப்புகள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவேற்பு Dont make government employees debtors

அதேசமயம் பாஸ்கரன் தலைமையில் இயங்கும் மற்றொரு அரசு ஊழியர் சங்கம் முதல்வரின் சில அறிவிப்புகளை வரவேற்றுள்ளது. 

“ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் சரண் செய்து பணப்பயன் 01.10.2025 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்ந்துள்ள பெண் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறுவிடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற முதல்வரின்  அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம். மேலும், பண்டிகை கால முன்பணம் ரூ.20,000/-உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான முன்பணம் 1,00,000/-மற்றும் 50,00/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் ரூ.5,00,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Dont make government employees debtors

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share