இந்தியாவில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியர்களை பாதியிலேயே திருப்பி அனுப்புவது அறம் அல்ல என்று மருத்துவர் அமலோற்பவநாதன் கூறியுள்ளார். Doctor Amalor Bhavanathan request to modi
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களை இந்தியா வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியர்கள் சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு சொந்த நாடு திரும்பும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் டெல்லியில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தங்களின் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் பாகிஸ்தானிய தம்பதி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள், “தங்களது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்திருக்கிறோம்.. ஏற்கனவே ரூ.1 கோடி வரை செலவு செய்திருக்கிறோம் .அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில் எங்களை உடனடியாக பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் மருத்துவர் (Vascular Surgeon and Transplant) அமலோற் பவநாதன் பிரதமர் மோடிக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “.கடந்த வாரம் (22, ஏப்ரல் 2025) இந்திய வரலாற்றில் இன்னும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. காஷ்மீரின் மிகவும் அழகான பைசாரான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டு இருந்த பகல் வேளையில் 5அல்லது 6 ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் ஈவு இரக்கம் இல்லாமல் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றார்கள்.
மேலும் சுமார் 20பயணிகள் படுகாயமடைந்து தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள். ஒருவர் சமீபத்தில் தான் திருமணம் ஆன கடற்படை அதிகாரி. திருமணம் நடந்த 6நாட்களில் அவர் மனைவி,தனது கணவரை இழந்த பெரும் சோகம்.இன்னொருவர் விமானப்படை அதிகாரி. மற்றும் ஒருவர் உளவுத்துறை அதிகாரி. தீவிரவாதிகளை தடுக்க முயன்ற ஒரு உள்ளூர்வாசியும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கோர சம்பவம் காஷ்மீர் நிலையை பல வருடங்கள் பின் தள்ளியுள்ளது. இதை நடத்திய கொடியவர்கள் யார் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. முதலில் The Resistance Front என்ற அமைப்பு தாங்கள் தான் நடத்தியதாக ஒப்புக் கொண்ட இந்த குழு பின்பு மறுத்தது.
பாகிஸ்தான் அரசு, இந்த தாக்குதலுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என மறுக்கிறார்கள்.சர்வதேச விசாரணைக்கு தயார் என்று சொல்கிறார்கள். தங்கள் தலைமையில் இயங்கும் இந்திய அரசின் புலனாய்வு பல உண்மைகளை விரைவில் வெளிக்கொண்டு வரும் என நம்புகிறேன்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இதற்கு காரணமான அனைவரையும் மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவீர்கள் என நம்புகிறேன். Doctor Amalor Bhavanathan request to modi
இந்த தாக்குதல் தொடர்ந்து இந்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தான் பல நடவடிக்கைகள் அறிவித்துள்ளது.இவையெல்லாம் யுத்த மேகங்கள் சூழும் நேரத்தில் நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் தான்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக பாகிஸ்தான் பயணிகள் விஸா ரத்து செய்யப்பட்டது. சார்க் விசா வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 26க்குள்ளும்,மருத்துவ விசா வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 29க்குள்ளும், மற்ற விசா வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 27க்குள்ளும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்தது.
ஒரு மருத்துவராக எனது வேண்டுகோள்: பாகிஸ்தானில் இருந்து பல நோயாளிகள் பல சிக்கலான நோய்களுடன் மருத்துவ உதவி நாடி இந்தியாவுக்கு வருகிறார்கள்.இவர்களில் பலரும் எளிமையான குடும்பத்தில் இருந்து வருபவர்கள்.(பெரிய பணக்காரர்கள் அமெரிக்கா போன்ற நாடுகள் சென்று விடுவார்கள்).

இவர்களில் பலர் குறிப்பாக குழந்தைகள் மிகவும் சிக்கலான நோய் காரணமாக தான் இங்கு வருகிறார்கள்.இந்திய துணை கண்டத்தில் உள்ள இந்தியா போன்ற மருத்துவ கட்டமைப்போ, இவ்வளவு சிறந்த மருத்துவர்களோ வேறு எங்கும் இல்லை என்பது நம் அனைவருக்கும் உங்களின் தலைமையில் இயங்கும் அரசுக்கும் பெருமை தரக்கூடிய விஷயம்.
இந்திய அரசு புதிதாக எந்த பாகிஸ்தான் நோயாளிக்கும் மருத்துவ விசா வழங்க வேண்டாம்.ஆனால் தற்சமயம் இங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளை, சிகிச்சை முடியும் வரை அனுமதிப்பது உங்கள் அறம் சார்ந்த மாண்பை உலகுக்கு பறை சாற்றும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வளவு நம்பிக்கை உடனும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று வரும் நோயாளிகளை, சிகிச்சையை பாதியில் நிறுத்தி திரும்ப அனுப்புவது அறம் சார்ந்த செயல் அல்ல என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் யுத்தம் நடக்கும் போதே பாகிஸ்தான் சிறுமிக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து அந்த சிறுமியும் அவர் பெற்றோரும் கண்ணீர் மல்க கை குப்பி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த காட்சி இன்றும் நமது கண் முன்னே நிற்கிறது. Doctor Amalor Bhavanathan request to modi