சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. அத்தொகுதியில் அண்ணா நகர் கார்த்திக் மோகனை வேட்பாளராக திமுக அறிவிக்க இருக்கிறது.
அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மோகன். இவரது மகன் கார்த்திக் மோகன். இம்முறை அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். ஏற்கனவே அண்ணா நகர் தொகுதியில் தேர்தல் பணிகளையும் தொடங்கி இருந்தார் கார்த்திக். பொங்கல் பண்டிகையின் போது, வாக்காளர்களுக்கு ரூ3,000 மதிப்பிலான பொருட்களை வீடுதோறும் வழங்கினார் கார்த்திக்.
இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதி சிட்டிங் திமுக எம்.எல்.ஏ.வான அ.வெற்றியழகன் இம்முறை போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார். திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழனின் பேரன் வெற்றியழகன்.
இதனையடுத்து ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக அண்ணா நகர் கார்த்திக் மோகனை திமுக களமிறக்க இருக்கிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனாவை எதிர்கொள்ள கார்த்திக் மோகன் சரியான வேட்பாளராக இருப்பார் என்பதால் அவரை வில்லிவாக்கத்தில் திமுக களமிறக்க இருக்கிறது.
