அதிமுகவில் ஒரு இஸ்லாமிய வேட்பாளருக்கு வாய்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Digital Thinnai AIADMK

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை இன்று (மார்ச்27) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் 17 பெண்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற இஸ்லாமிய வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share