இல்லத்தரசிகளுக்கு ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்.. தேர்தல் அறிக்கையில் மாஸ் காட்டிய திமுக!

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று மார்ச் 29-ந் தேதி வெளியிட்டார். அதில் மகளிருக்கு இல்லத்தரசிகள் கூப்பன் திட்டத்தை அறிவித்தார்.

இல்லங்களின் அரசிகளான மகளிரை மகிழ்விக்க முக்கிய வாக்குறுதியை ஸ்டாலின் அறிவித்தார்.
இல்லத்தரசிகள் வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோஓவன், மற்றும் மின்னடுப்புகளை போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்க அல்லது ஏற்கனவே வாங்கிய பழைய பொருட்களை மாற்றவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தாத இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த பொருட்களை வாங்கி கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share