திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 3) நடைபெற்றது. Dmk district secretary meeting
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

வரும் ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம், 1,244 இடங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட நான்கு தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “தொண்டர்களுக்கு நமது ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்ற ஒரு அதிருப்தி களத்தில் நிலவுகிறது. ரேஷன் கடைகளில் சேல்ஸ் மேன், சூப்பர்வைசர், எடையாளர் மற்றும் அங்கன்வாடிகளில் பொறுப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கு ஏன் காலதாமதம் ஆகிறது. மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட் கொடுத்துட்டாங்களா?” என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இருவரிடமும் கேட்டார்.
இரண்டு அமைச்சர்களும் எழுந்து, “சில மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் இன்னும் முழுமையாக கொடுக்கவில்லை. ஒரு பணிக்கு நமது கட்சிக்காரர்களே 10 பேரை பரிந்துரை செய்கின்றனர். இதனால் ஆட்களை தேர்ந்தெடுக்க லேட் ஆகிறது” என்று பதிலளித்தனர். Dmk district secretary meeting
உடனடியாக மாவட்டச் செயலாளர்களிடம், “லிஸ்ட் கொடுக்க நீங்க ஏன் லேட் பண்றீங்க. உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் லிஸ்ட் கொடுங்க. கட்சிக்காரர்களுக்கு பண்ணுங்க” என்று ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த நேரத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான பூண்டி கலைவாணன் எழுந்து, “எங்க மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணியிடம், மூன்று விதமான பணிகளுக்கு பரிந்துரை செய்தேன். அதில் ஒரு துறையில் தான் அதுவும் குறைவான வேலைகளை பெற்றுக் கொடுத்தார். மற்ற இரண்டு துறைகளிலும் ஒரு சதவிகிதம் கூட செய்துக்கொடுக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள நமது கட்சிக்காரர்களிடம் நான் பதில் சொல்ல முடியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
உடனே கோபமான அமைச்சர் சக்கரபாணி, கலைவாணனுக்கு பதில் சொல்வதற்காக மேடையை நோக்கி சென்றார். அப்போது பக்கத்தில் இருந்த அமைச்சர்கள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இருப்பினும், கலைவாணன் குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கொந்தளித்தார் சக்கரபாணி. Dmk district secretary meeting
இதையெல்லாம் மேடையில் இருந்து கவனித்த முதல்வர், “இங்கே வேலைவாய்ப்பு பற்றி எதுவும் பேச வேண்டாம். தேர்தல் தொடர்பாக மட்டுமே பேசுவோம்” என்றார்.
அப்போது, “மாவட்டத்துல என்னென்ன வேகன்ஸி இருக்குன்னே அதிகாரிகள் சொல்ல மாட்றாங்க. துறை அமைச்சர்களிடம் மற்ற சீனியர் அமைச்சர்கள் சொன்னா தான் ஆட்கள நியமிக்கிறாங்க. வேகன்ஸி இருப்பது தெரிஞ்சா தானே கேட்க முடியும்” என்று மாவட்ட செயலாளர்கள் முணுமுணுத்தனர்.
இந்தக் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை ஸ்டாலின் பேச சொல்லியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் பேசும்போது, ” கடந்த 25 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் தொகுதியில் நமது கட்சி வெற்றி பெறவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக நமது கட்சியை வெற்றி பெற வைப்பேன்” என்று உறுதியளித்தார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கெளதம சிகாமணி பேசும்போது, “திருக்கோவிலூர் தொகுதிக்கு 400 கோடி நிதி ஒதுக்கியிருக்கீங்க. விக்ரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ சிவா முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று ஏராளமான நிதிகளை கொண்டு வருகிறார். திருக்கோவிலூர், விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளையும் நான் வெற்றி பெற வைப்பேன்” என்று தெரிவித்தார். இவர்களை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மற்ற மாவட்ட செயலாளர்களும் பேசினர். Dmk district secretary meeting
இப்படியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சூடாக நடந்து முடிந்திருக்கிறது.trict secretary meeting