மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?

By Kavi

|

Published on 15 Apr 2024, 9:00 AM

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம்.

ADVERTISEMENT

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது.

ADVERTISEMENT

தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 

ADVERTISEMENT

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்…

தென்காசி வெற்றிச்சாரல் யார் மீது? | Minnambalam Mega Survey 2024 | Tenkasi | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீன்கள் விலை உயரும்: இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்!

மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel