இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது டிட்வா (டித்வா) புயல். இப்புயலால் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சிக்கி கடந்த 3 நாட்களில் 46 பேர் பலியாகி உள்ளனர்.
இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயல் தற்போது திருகோணமலையை கடந்து யாழ்ப்பாணத்தின் வழியாக தமிழ்நாட்டை நோக்கி நகருகிறது. இப்புயலால் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மழை வெள்ள நிலச்சரிவு பாதிப்புகளால் கடந்த 3 நாட்களில் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இலங்கையில் கடந்த 16-ந் தேதி முதல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. 44,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார துறையில் அவசர நிலை பிரகடனம்
இலங்கையில் வெள்ள பேரழிவு காரணமாக நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை சுகாதாரத் துறைக்கு அவசர நிலையைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு “Operation Sagar Bandhu” என்ற பெயரில் நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது.
