ADVERTISEMENT

டித்வா புயல் : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

Published On:

| By Kavi

புயல் காரணமாக தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் டித்வா புயல் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்தனர்.

இந்தசூழலில் நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. நாளை சனிக்கிழமை என்றாலும் தனியார் பள்ளிகள் செயல்படும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாளை எந்தப் பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதுபோன்று நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்ட கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share