IPL 2025: பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை அவுட் செய்த பின்னர், அதனை சர்ச்சைக்குரிய வகையில் கொண்டாடியததற்காக லக்னோ பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதிக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.Digvesh Rathi got 25% fine by bcci
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று (எப்ரல் 1) இரவு பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி சந்தித்தது.
பஞ்சாப் வெற்றி! Digvesh Rathi got 25% fine by bcci
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில், பிராப்சிம்ரன் சிங் (69), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (52*) மற்றும் நேகல் வதேரா(43*) ஆகியோரின் அபார பேட்டிங்கால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே பஞ்சாப் அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ.
நேற்றைய போட்டியின் போது, பஞ்சாப் அணிக்கு எதிராக மூன்றாவது ஓவரை வீசினார் திக்வேஷ்.
அந்த ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட பிரியான்ஷ் ஆர்யா பேட்டில் பட்டு டாப் எட்ஜ் ஆக, மேல்நோக்கி பறந்தது. அதனை மிட் ஆஃப் திசையில் இருந்து ஓடிவந்த ஷர்துல் தாக்கூர் கேட்ச் பிடித்து அவுட் செய்தார்.
இதனையடுத்து விக்கெட் வீழ்த்திய கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த பிரியான்ஷை நோக்கி ஓடிய திக்வேஷ், அவர் அருகில் சென்று நோட்புக்கில் கையெழுத்திடுவது போல் சைகை செய்தார் .
இதற்கு அப்போதே களத்தில் இருந்த நடுவர் ஆட்சேபனை செய்தார். தொடந்து போட்டி முடிந்த பின்னர் திக்வேஷின் சைகை குறித்து நடுவர் புகார் அளித்தார். அதனை அவரும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து ஐபிஎல் லெவல் 1 நடத்தை விதிகளை மீறியதற்காக திக்வேஷ் சிங் ரதிக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
விளம்பரக் கொண்டாட்டம்! Digvesh Rathi got 25% fine by bcci
திக்வேஷின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.
அவர் கூறுகையில், “முந்தைய பந்தில் பேட்ஸ்மேன் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்த பிறகு அவரது விக்கெட்டை கைப்பற்றினால், ஒரு பவுலரின் கொண்டாட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திக்வேஷின் சைகைகள் அனைத்தும் தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதாக அமைந்தது ஏமாற்றம் அளிக்கிறது ”என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.