டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு என்ன சிகிச்சை? புதிய டிஜிபி ‘அவர்தானா’?

Published On:

| By Minnambalam Desk

What is the treatment for Stalin?

வைஃபை ஆன் செய்ததும் அப்பல்லோ மருத்துவமனையின் ரிப்போர்ட்டை படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். What is the treatment for Stalin?

முதல்வர் ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அடுத்தடுத்த பரிசோதனைகள் நடத்தப்படுவது வரை செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே? What is the treatment for Stalin?

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் முதல்வருக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது பற்றி அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் நாம் பேசிய போது, “முதல்வருக்கு வழக்கமான இதயதுடிப்பு அளவு சற்று குறைவாக இருந்தது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு இதய துடிப்பு சீராகிவிட்டது. ஆனாலும் எதிர்காலத்தில் இது போன்ற உடல்நலன் பாதிப்புகளைத் தவிர்க்க சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக அப்பல்லோ மருத்துவமனை பக்கம் தலைவைத்து படுத்தாலோ அத்தனை சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அதுவும் முதல்வர் ஸ்டாலின் என்கிற போது, அனைத்து சோதனைகளையும் அப்பல்லோ மருத்துவமனை மேற்கொண்டுள்ளது. மூளைக்கு செல்லக் கூடிய ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா? என்பதில் தொடங்கி முழு உடல் பரிசோதனை வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காகவே சென்னை ஆயிரம் விளக்கு மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். What is the treatment for Stalin?

ADVERTISEMENT

இதயதுடிப்பு அளவை எப்போதும் சீராக வைத்திருப்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது என்கின்றன. What is the treatment for Stalin?

அத்துடன், “தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளதால், ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவிடலாம் என முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் மருத்துவர்களோ, “3 நாட்களாவது மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனால் வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்” என்கின்றன அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.. What is the treatment for Stalin?

ADVERTISEMENT

சரி.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என டிக் செய்யப்பட்டுவிட்டதா?

தமிழக டிஜிபியாக இருக்கும் சங்கர் ஜிவால் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். தமக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் சங்கர் ஜிவால். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.

தற்போதைய நிலையில் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி ரேஸில் சந்​தீப்ராய் ரத்​தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகியோரது பெயர்கள் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றன.

புதிய டிஜிபிக்கு தகுதியானவர்கள் என மொத்தம் 8 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சந்​தீப்ராய் ரத்​தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகியோருடன் அபய்குமார் சிங், வன்னி பெருமாள், வினித் தேவ் வான்கடே, மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் ஆகியோரது பெயர்களும் இருக்கிறதாம்.

இந்த பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டு 3 பேரை தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும். அவர்களில் ஒருவரை முதல்வர் ஸ்டாலின் ‘டிக்’ செய்வார்.

இது பற்றி கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பெயரைத்தான் டிக் செய்திருக்கிறார்.. அவரைப் பற்றிய ரிப்போர்ட் அனைத்தும் ‘ரொம்பவே பாசிட்டிவ்’ என்பதால் டிக் அடித்து வைத்துள்ளார் சிஎம் என்கின்றன.

யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்? “ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தின் போது சென்னை மாநகர கமிஷனராக இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவர். 1992-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கியவர்.

2003-ல் சிபிசிஐடியில் எஸ்பியாக இருந்த போது, பெரும் பரபரப்பை கிளப்பிய முத்திரைத்தாள் மோசடி வழக்கு குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என சந்தீப் ராய் ரத்தோர் பற்றிய ‘பாசிட்டிவ்’ விவரங்களை அடுக்கிக் கொண்டே போகிறது காவல்துறை வட்டாரங்கள்.

ஓஹோ.. டெல்லியில் பெரும் புயல் தாக்கி விட்டதாமே?

ஆமாம்.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமாதான் இப்போது எங்க திரும்பினாலும் ஒரே பேச்சாக இருக்கிறது.

ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தாரா? திடீரென ராஜினாமா செய்ய வைக்கப்பட்டாரா? என்பதில் தொடங்கி ஜேபி நட்டா காரணமா? உச்சநீதிமன்றம் காரணமா? பீகார் தேர்தல் காரணமா? என ஒவ்வொரு நகர்வாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவை தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா, எம்பிக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது..
ஆனாலும் மத்திய அரசும் சரி ஆளும் பாஜகவும் அரசு.. இப்படி ஒரு முக்கியமான விஷயத்தில் கனத்த மவுனத்தை கடைபிடிப்பதுதான் ‘ஏதோ நடந்திருக்கிறது’ ‘எல்லாமே மர்மமாய் இருக்கிறது’ என்றெல்லாம் பேச வைத்திருக்கிறது… மர்மங்கள் மூடிய திரை விரைவில் விலகத்தான் போகிறது என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share