ஸ்டாலின் எப்படி இருக்கிறார்? – உதயநிதி பேட்டி!

By christopher

|

Published on 22 Jul 2025, 12:39 PM

udhayanidhi stalin gives mkstalin health update

மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 22) விளக்கம் அளித்துள்ளார். udhayanidhi stalin gives mkstalin health update

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஸ்டாலின் உடல்நிலை குறித்து இரவு 9 மணியளவில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் மருத்துவர்கள் அளித்த பரிந்துரைப்படி சில பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே மருத்துவமனையில் இருந்து தனது பணிகளைத் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதன்படி, தேனாம்பேட்டை அப்போலோவில் இன்று காலை ஸ்டாலினுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக காரில் சென்ற அவர், பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திரும்பினார்.

இந்த நிலையில் சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சர்வதேச – தேசிய – மாநில அளவிலான போட்டிகளில் கடந்தாண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.

ADVERTISEMENT

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதலமைச்சர் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “முதலமைச்சர் நலமாக இருக்கிறார். இன்று காலையில் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை அளிப்பார்கள். மூன்று நாட்கள் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவமனை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. விரைவில் அவர் நலமடைந்து வந்துவிடுவார்” என உதயநிதி தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel