டிஜிட்டல் திண்ணை: விவகாரத்து கேட்கும் விஜய் மனைவி.. அம்பலமான திரிஷா உறவு.. பனையூரில் நடந்தது என்ன?

Published On:

| By Mathi

Digital Thinnai Vijay

வைஃபை ஆன் செய்ததும், “அப்படிப் போடு போடு” பாடலை கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

வாருமய்யா.. உம்மைத்தான் எதிர்பார்த்தேன்.. விவகாரத்து கேட்கிறாரே விஜய் மனைவி சங்கீதா.. என்ன பிரச்சனையாம்?

ADVERTISEMENT

தேர்தல் தேதி அறிவிக்கப் போறாங்க.. கூட்டணிகளில்ல தொகுதி பங்கீடு எப்படி இருக்கும்னு எல்லாரும் பேசிகிட்டு இருக்கிற நேரத்துல தான் விஜய் மனைவி சங்கீதா, விவகாரத்து கேட்டு மனுத் தாக்கல் செஞ்சிருக்காங்க..

சங்கீதா வெறும் விவகாரத்து மட்டும் கேட்கலை.. அதுல நடிகைக்கும் விஜய்க்குமான தொடர்பை பத்தி பல விஷயங்களை சொல்லி இருக்காங்க.. விஜய் பொது நிகழ்ச்சிக்கு போனாலும் வெளிநாடு போனாலும் அந்த நடிகை கூடவே போறாங்கன்னும் பெரிய அணுகுண்டையே வீசியிருக்காங்க..

ADVERTISEMENT

இதைப் பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட என்னதான் நடந்ததுன்னு விசாரிச்சப்ப, “விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்குமான பிரச்சனை பல வருஷங்களாக இருக்குது.. பனையூரில ஒரே பங்களாவுல இருந்தாலும் சங்கீதா ஒரு ப்ளோரிலும் விஜய் இன்னொரு ப்ளோரிலும் இருக்கிறாங்க.. சமையல் கூட வெவ்வேறதான்.. வெளியே எங்கே போனாலும் வெவ்வேற கார்லதான் போறாங்க.. ஒரே வீட்டுல தனித்தனியாதான் வாழ்றாங்க..

சங்கீதாவுக்கும் விஜய்க்கும் ஒரு வருஷமா டைவர்ஸ் பேச்சுவார்த்தை நடந்துகிட்டுதான் இருக்குது.. பாம்பே வக்கீல்கள் மூலமாக விஜய்க்கு சங்கீதா நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு பண்ணினாங்க. ..

ADVERTISEMENT

சங்கீதாவுக்கான செலவு விவகாரங்களை தவெக பொருளாளர் வெங்கட்ராமன்தான் பார்த்துகிட்டாரு.. அவருதான், “இது தேர்தல் நேரம்.. இப்ப எதுவும் பிரச்சனை வேண்டாம்”னு சங்கீதாகிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.. இப்ப எல்லாமே கை மீறி போயிருச்சு..” என்றனர்.

ரெண்டு சைடுல பேச்சுவார்த்தை நடத்தியிருப்பாங்களே.. செட்டில் ஆகலையா?

அதை பத்தி கேட்டப்ப, “சங்கீதா சைடுல இருந்து ரூ50 கோடி செட்டில்மெண்ட் தொகை கேட்டாங்க.. விஜய்யோ ரூ15 கோடி மட்டும்தான் தருவேன்னு சொல்லி இருக்காரு.. இதுலதான் ரொம்ப இழுபறியாகிடுச்சு” என்கின்றனர்.

நடிகையோட கள்ளத் தொடர்பில் இருக்கிறாரு.. அது இதுன்னு சங்கீதா சொல்லி இருக்காங்களே?

ஆமாய்யா.. சங்கீதா விவகாரத்து மனுவுல நடிகை பேரை சொல்லலை.. ஆனா நடந்த சம்பவ்ங்களை எல்லாம் சொல்லி இருக்காங்க.. வெளிநாட்டுக்கு நடிகையும் விஜய்யும் போனா அந்த போட்டோவை சோசியல் மீடியாவுல நடிகை வெளியிடுறாங்களாம்.. அதை விஜய்யும் கண்டுக்கிறது இல்லையாம்.. நடிகைக்காகவே தன்னுடன் குடும்பம் நடத்தாம ஒதுங்கிட்டாரு விஜய்-ன்னு ஏகப்பட்ட புகார்களை அடுக்கி இருக்காங்க..

இதைப் பத்தி விசாரிப்ப, அந்த நடிகை வேற யாருமில்லை திரிஷாதான்னு எல்லோருக்குமே தெரியுமே.. திரிஷாதான் விஜய் கூட இருக்கிற போட்டோஸை இன்ஸ்டாவில அப்பப்ப ரிலீஸ் செய்யுறங்க.. ரீசன்ட்டா கூட திரிஷா வீட்டு நாய்க் குட்டியை விஜய் கொஞ்சுற போட்டோ கூட வைரலாச்சே..

திரிஷா கூட விஜய் நெருக்கமா இருக்கிறாருன்னுதான் சங்கீதா பிரச்சனையை ஆரம்பிச்சாங்க.. ஒரு கட்டத்துல பனையூர் வீட்டுல லிப்ட்ல விஜய் ப்ளோருக்கு திரிஷா போறதை கண்ணால பார்த்துட்டாங்க சங்கீதா.. அன்னைக்கு எல்லாம் பயங்கர சண்டை.. வெங்கட்ராமனும் விஜய் பிரண்ட் விஷ்ணு ரெட்டியும்தான் அன்னைக்கு சமாதானப் படுத்துனாங்க..” என்றனர்.

சரி.. இப்ப திடீர்னு கோர்ட்டுக்கு சங்கீதா போயிருக்காங்களே.. அதுக்கு என்ன காரணம்?

ஆமாய்யா.. விஜய்தான் திடீர்னு விவகாரத்து வாங்கி பிரிஞ்சடலாம்.. சங்கீதாவை நோட்டீஸ் அனுப்ப சொல்லுங்கன்னு முடிவு எடுத்தாராம்.. அவர் சொன்னதாலதான் சங்கீதா நோட்டீஸ் அனுப்பி இருக்காங்களாம்..

இதை பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “விஜய் இப்படி முடிவு எடுக்க ஒரு காரணமும் இருக்கு.. ஏன்னா எலக்‌ஷன் பீக்குல இருக்கிற நேரத்துல விஜய்க்கு எதிரா சங்கீதாவை மீடியா முன்னாடி பேச வைக்க திமுக ‘ப்ளான்’ பண்ணும்னு விஜய் உறுதியா நம்புறாரு..

அதுக்கு ஏன் இடம் கொடுப்பானேன்? கணவன் – மனைவியா இருக்கும் போது வைக்கிற குற்றச்சாட்டுகளுக்குதான் முக்கியத்துவம் கிடைக்கும்..

விவகாரத்துன்னு போயிட்டா அப்படி என்னதான் குற்றச்சாட்டுகளை சொன்னாலும் அது பெருசா எடுபடாது.. வெயிட்டேஜ் இருக்காதுன்னு விஜய் நினைச்சாரு..

அதனாலதான் மியூச்சுவலா விவகாரத்து வாங்கிடுவோம்னு சங்கீதாவை நோட்டீஸ் அனுப்ப சொன்னாரு விஜய்” என்றனர்.

ஆனா நடந்தது என்னவோ வேற மாதிரி ஆகிடுச்சு..வரும் முன் காப்பது விவேகம்னு விஜய் ஒரு ரூட்டை போட்டாரு..

சங்கீதாவோ, ‘நடிகைக்கும் விஜய்க்குமான உறவை’ வெட்ட வெளிச்சமாக்கி புயலை கிளப்பிவிட்டுட்டாடாங்க..

இப்படி எல்லா விஷயங்களையும் ஓபனாக சங்கீதா சொல்லிடுவாங்கன்னு விஜய்யே எதிர்பார்க்கலை.. இது எதிர்பாராத ட்விஸ்ட்தான் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share