வைஃபை ஆன் செய்ததும், “ஒருவழியாக எண்ட் கார்டு போட்டாச்சா?” என்கிற சவுண்டு காதில் விழுந்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எண்ட் கார்டு பத்தி பேசுறீரு?
வேற ஒன்னுமில்லையா.. அங்கிட்டா இங்கிட்டான்னு ரொம்பவே ‘ஊசலாடி’கிட்டு இருந்த ஓபிஎஸ் ஒரு வழியாக இன்னைக்கு அறிவாலயத்துக்கு வந்து திமுகவுல சேர்ந்துட்டாருல்ல அதைத்தான் சொல்றேன்..
ஆமாய்யா.. ஓபிஎஸ் விவகாரத்துல நிறைய சொல்லி இருக்கிறீரு.. இப்ப என்னதான் நடந்துச்சாம்?
அதிமுகவுக்குள்ள எப்படியாவது சேர்த்துவிடுங்கன்னு அமித்ஷாகிட்ட சொல்லிகிட்டே இருந்தாரு ஓபிஎஸ்.. அமித்ஷாவோ, ”டிடிவி தினகரனுக்கு ஓகே சொல்றாரு.. உங்களை சேர்க்கவே முடியாதுங்கிறாரே இபிஎஸ்”னு கை கழுவி விட்டாரு… அப்புறமா குருமூர்த்தி மூலமா முயற்சி செஞ்சாரு ஓபிஎஸ்.. அவரும் ‘நாங்க சொன்னா இபிஎஸ் கேட்குறது இல்லை’ன்னு சொல்லிட்டாரு…
இதனால திரிசங்கு நிலையில தவிச்சு போயிட்டாரு ஓபிஎஸ்.. கூடவே இருந்த பண்ருட்டியார், தனிக்கட்சி தொடங்குங்கன்னு சொல்லிப் பார்த்தாரு… ஓபிஎஸ் கேட்கலை.. இப்ப பண்ருட்டியார் தனிக்கட்சியே தொடங்கிட்டாரு..
‘ஏதாவது’ முடிவு எடுங்கன்னு சொல்லிப் பார்த்தும் ஓபிஎஸ் கேட்காததால மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் ஏற்கனவே திமுகவுக்கு வந்துட்டாங்க.. சிலர் விஜய்யின் தவெகவுக்கு போயிட்டாங்க..
இதனால என்னதான் செய்யுறதுன்னு தேனி செட்டியபட்டியில ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை செஞ்சாரு ஓபிஎஸ்.. அதைப் பத்தி நாம ஏற்கனவே சொல்லி இருக்கோம்யா..

அந்த கூட்டத்துல திமுகவோட போகலாம்னு 90% ஆதரவாளர்கள் சொன்னாங்க.. விஜய் கூட போகலாம்னு 10% பேரு மட்டுமே சொன்னாங்க..
அதே நேரத்துல திமுகவோட கூட்டணி மட்டும் வெச்சுக்கலாம்னு 60% ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சொன்னாங்க.. இதனால ஓபிஎஸ் குழப்பத்துலதான் இருந்தாரு..
இப்ப திமுகவிலேயே ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சேர்ந்துட்டாரு…

இதோட பின்னணியை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப,” சபரீசன் சவுத்ல தொடங்கி ஒவ்வொரு மாவட்டமா போனாரு.. மாவட்ட கட்சி அலுவலகத்துல நிர்வாகிகளை சந்திச்சாரு.. சில சீனியர் நிர்வாகிகள் வீட்டுக்கும் போய் பார்த்தாரு..
தென் மாவட்டங்களில்ல நடந்த சந்திப்புகளில்,”அதிமுக கூட்டணியில டிடிவி இணைஞ்சதால சாதகம் என்ன? பாதகம் என்ன?”ன்னு விலாவாரியாக விசாரிச்சாரு.. குறிப்பாக டிடிவியின் அமமுக போன முறை அதிகமான
ஓட்டுகள் வாங்குன தொகுதிகளில்ல இந்த விசாரணை நடந்துச்சு.. இதுல, “அதிமுக கூட்டணியில அமமுக இருக்கிறதால திமுகவுக்கு பாதிப்பு இருக்கும்”னு கட்சி நிர்வாகிகள் சொல்லி இருக்காங்க..
இதை எல்லாம் வெச்சு சிஎம்-க்கு சபரீசன் ரிப்போர்ட் கொடுத்தாரு.. அதுல, அதிமுக கூட்டணியில டிடிவி இருக்கிறதால தென் மாவட்டங்கள், தஞ்சாவூரில் சில தொகுதிகளில் நமக்கு நெகட்டிவாக வாய்ப்பு இருக்குன்னு சொல்லப்பட்டிருந்துச்சு..

அதனால இந்த டேமேஜை பேலன்ஸ் செய்ய, “Operation SO- Sasikala- OPS”- கையில எடுக்கப்பட்டது..” என்றனர்.
ஓபிஎஸ்ஸை சேர்க்கிறதை பத்தி சிஎம் என்ன சொன்னாருன்னு கேட்டப்ப, “சரி.. ஓபிஎஸ்கிட்ட பேசுங்க… ஆனா அவரு அப்படி இப்படின்னு மாறி மாறி பேசிகிட்டே இருக்காரு.. அதனால தெளிவாக பேசிடுங்க”ன்னு ஸ்டிரிக்டா சொன்னாரு சிஎம்..
அதே மாதிரி, ”அதிமுக உரிமை மீட்பு குழுங்கிற பேருல கூட்டணி எல்லாம் வெச்சா சரியா வராது.. எலக்ஷன் நேரத்த்ல திடீர்னு டெல்லியில பேசிட்டேன்னு முடிவை மாத்தினாலும் மாத்திக்குவார்.. அதனால ஒரேயடியாக கட்சியில சேர சொல்லிடுங்கன்னும் கண்ட் அண்ட் ரைட்டாக சிஎம் சொன்னார்” என்றனர்.
சரி.. ஓபிஎஸ்-க்கு என்ன பொறுப்பு? தரப் போறாங்கன்னும் விசாரிச்சப்ப, “சிஎம்மைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பதவிகளையும் வேற கட்சியில இருந்து வர்றவங்களுக்கு கொடுக்க முடியாதுங்கிறது உறுதியா இருக்காரு..
ஓபிஎஸ், தனக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டாரு.. அப்படி ஒரு பதவியே கட்சியிலேயே இல்லையேன்னு சொன்ன சிஎம், நியமன பதவிகளில்ல ஒன்னை பார்த்து தரலாம்னு சொல்லிட்டாரு.. அதே மாதிரி
ஆட்சி அமைக்கும் போது ‘சபாநாயகர்’ மாதிரி பொறுப்பு கொடுக்கலாம்னும் பேசியிருக்காங்க.. இன்னும் எதுவும் பைனலாகலை” என்றனர்.
ஓபிஎஸ், அவரோட வந்திருக்கிற உசிலம்பட்டி ஐயப்பன் ரெண்டு பேரும் எம்.எல்.ஏக்கள்.. அவங்களோட சேர்த்து இன்னொரு சீட்னு மொத்தம் 3 சீட்டை ஓபிஎஸ்-க்கு சிஎம் தருவாருன்னும் சொல்றாங்க..
ஓபிஎஸ்ஸோ, ”ரொம்பவே உருக்கமா.. சிஎம்கிட்ட என் பையனை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்.. இனி அவனை நீங்கதான் பார்த்துக்கனும்னு”ம் சொல்லி இருக்கிறாராம்.

ஓஹோ Operation-ல் ஓபிஎஸ் அத்தியாயம் ஓவர்.. சசிகலா பத்தி?
இதை பத்தி நாம விலாவாரியா சொல்லி இருக்கோம்.. சசிகலா பத்தி கேட்குறப்ப, “அதிமுக கூட்டணிக்கு கிடைக்கிற டிடிவியின் அமமுக ஓட்டுகளை பிரிக்கத்தான் Operation SO.. அதிமுகவுக்கு மொத்தமா அந்த ஓட்டுகள் போகாம அதை பிரிச்சு திமுகவுக்கும் கணிசமாக கொண்டுவரத்தான் சசிகலா- ஓபிஎஸ்ஸை டார்கெட் செஞ்சாங்க..
சசிகலாவைப் பொறுத்தவரைக்கு சவுத்ல, டெல்டாவுல 30 தொகுதியை குறி வைக்கிறாங்க.. சசிகலாவோட பிரசாரம், ரோடு ஷோ எல்லாத்துக்கும் டிலே பண்ணாம உடனே பர்மிஷன் கொடுங்கன்னு கோட்டையில இருந்து உத்தரவும் போயிருக்கு.. அவங்களும் இப்ப கட்சியை ஆரம்பிச்சிட்டாங்க… பிரசாரத்தை தொடங்கிட்டாங்க.. .. ஓபிஎஸ் திமுகவுக்கே வந்துடாரு” என்றனர்.
ஆக Operation SO முடிஞ்சதா? சரி.. ஓபிஎஸ் முடிவை பத்தி இபிஎஸ் என்ன சொல்றாராம்?
இபிஎஸ் தரப்புல விசாரிச்சப்ப, “ரொம்பவே சந்தோஷமா இருக்கிறோம்.. 4 வருஷமா ரொம்ப குடைச்சலாகவே இருந்தாரு.. இப்ப ஒரேயடியாக திமுகவுக்கே போயிட்டதால தலைவலிவிட்ட மாதிரி இருக்கு”ன்னு சொல்றாங்க..
ஓபிஎஸ் வந்ததுல திமுகவுல ரொம்ப ஹேப்பியா?
திமுகவுல சிஎம்மைப் பொறுத்தவரைக்கும், “மாநிலத்தின் முன்னாள் முதல்வர்.. நம்மளை முதன்மையா எதிர்க்குற கட்சியில தலைவர் நிலையில ஒருங்கிணைப்பாளரா இருந்தவரு..நம்ம லீடர்ஸிப்பை ஏத்துகிட்டு வந்துருக்காருன்னு ரொம்ப மகிழ்ச்சியில இருக்கிறாராம்..
ஆனா திமுகவுல சீனியர்ஸ் ரொம்ப பேருக்கு ஆதங்கம் என்னான்னா, “இப்படியே அதிமுகவுல இருந்து வர்றவங்க எல்லாத்தையும் சேர்த்துகிட்டே இருக்கிறது மட்டுமல்ல.. அவங்களுக்குதான் முக்கியத்துவமும் அதிகமாக கிடைக்குதே..” அப்படின்னு வெளிப்படையாக பேசுறாங்க.. சோசியல் மீடியாவிலும் வேதனையை கொட்டுறாங்க” என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
