டிஜிட்டல் திண்ணை: 5 சீட்.. ஓகே சொன்ன சிபிஎம்.. ஒர்க் அவுட் ஆன ஸ்டாலின் ’சென்டிமெண்ட்’ டீல்.. என்ன நடந்தது? பரபர தகவல்

Published On:

| By Mathi

CPM DMK Deal 1

வைஃபை ஆன் செய்ததும், ”திருவிழான்னா சும்மாவா.. என்னா பரபரப்பு” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா சிபிஎம் கட்சியும் ஒப்பந்தம் போட்டாச்சு போல..

ADVERTISEMENT

ஆமாய்யா.. திமுக கூட்டணியில சிபிஎம் 5 இடங்களுக்கு ஓகே சொல்லிட்டு கையெழுத்திட்டு போட்டுடாங்க..

6 சீட்டுக்கு குறையவே மாட்டோம்னு சொன்னாங்களே சிபிஎம் தோழர்கள்.. இப்ப என்ன நடந்ததாம்?

ADVERTISEMENT

சிபிஎம் 6 சீட்தான் வேணும்னு உறுதியா இருந்தாங்க.. நேத்து முதல் நாள் 13 மணி நேரம் சிபிஎம் கமிட்டி ஆலோசனை நடத்துச்சு..இதுக்கு அப்புறமா சிபிஎம் குழுவை ஸ்டாலினே கூப்பிட்டு விட்டாரு..

சிபிஎம் குழு நேத்து ஸ்டாலினை சந்திச்சு பேசுனப்ப, “5 சீட்டை வாங்கிட்டு ஒத்துழைப்பு கொடுங்க”ன்னு கேட்டுக்கிட்டாரு.. நாங்க பேசிட்டு வர்றோம்னு சிபிஎம் குழு சொல்லிட்டு வந்துருச்சு..

ADVERTISEMENT

இன்னைக்கு காலையில சிபிஎம் குழு கூடி ஸ்டாலின் சொன்ன 5 சீட் ஆஃபரை ஆலோசனை செஞ்சுட்டு மறுபடியும் அவரை சண்முகம் குழு சந்திச்சது..

அப்ப, “எங்க மாநில கமிட்டி 6 சீட் குறைவாக வாங்க வேண்டாம்னு உறுதியாக சொல்லிட்டாங்க.. நீங்க 5-ன்னு சொல்லி இருக்கீங்க.. அதிகமாக 1 தொகுதியைத்தானே கேட்கிறோம்”னு ரொம்பவே உரிமையாக ஸ்டாலின் கிட்ட சண்முகம் குழுவில இருக்கிறவங்க சொன்னாங்க..

இதுக்கு ஸ்டாலின், “சரி.. நீங்க கேட்டபடியே 6 சீட் வாங்கிக்குங்க” என்று சொல்லும் போதே சண்முகம் குழு மகிழ்ச்சியடைந்தது..

ஆனா ஸ்டாலின் அடுத்த சொன்னதுதான் செம்ம ட்விஸ்ட்.. அதை சண்முகம் குழு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லையாம்..

அப்படி என்ன ஸ்டாலின் சொன்னாராம்?

சிபிஎம் சண்முகம் குழுகிட்ட “நீங்க கேட்ட 6 சீட்டை வாங்கிக்குங்க.. அதுல 5 இடத்துல நீங்க உங்க சின்னத்துல நில்லுங்க.. 1 இடத்துல மட்டும் இந்த ஸ்டாலின் நான் நிற்கிறேன்”ன்னு சொன்னாராம்..

ஒரு நிமிஷம் ஸ்டாலின் என்ன சொல்றாருன்னு புரியாம திகைத்தபடியே சண்முகம் குழு பார்த்தது..

அதாவது, 6-ல் 5 தொகுதிகளில் சிபிஎம் அவங்க சின்னத்துல நிற்கட்டும்.. ஒரு சின்னத்துல உதயசூரியன் சின்னத்துல போட்டியிடுங்கன்னு சொல்றதைத்தான் “1 இடத்துல ஸ்டாலின் நான் நிற்கிறேன்”ன்னு சொல்லி இருந்தாரு..

ஸ்டாலின் இப்படி சொன்னதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம , “நாங்க இதையும் கமிட்டியில பேசிட்டு மறுபடியும் வர்றோம்”னு சொல்லிட்டு வந்தாங்க சிபிஎம் தோழர்கள்..

ஸ்டாலின் இப்படி உரிமையோடு சொன்னதை டிஸ்கஷன் செஞ்சுட்டு, 5 சீட்டுக்கே ஓகே சொல்வோம் முடிவு செஞ்சுட்டாங்க சிபிஎம் தோழர்கள்.. இதுக்கு அப்புறம்தான் அறிவாலயத்துக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாச்சுய்யா என டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share