“நீரிழிவாளர்கள் என்ன சாப்பிடுவது என்பது பற்றி பல விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. இந்த அரிசியா, அந்தப் பழமா என்று குழப்பங்களும் நீடிக்கின்றன. அடிப்படையில் எந்த உணவு சாப்பிடுவதாக இருந்தாலும் அது அதிக கலோரியுள்ளதாக இருக்கக் கூடாது. உங்களின் பி.எம்.ஐ அளவு, உடல்ரீதியான நடவடிக்கைகள், வேலையின் தன்மை போன்றவற்றை வைத்தே உணவையும் முடிவு செய்ய வேண்டும்.
தோராயமாகச் சொல்ல வேண்டுமென்றால் உணவில் 55 சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் இருக்கலாம். 20 சதவிகிதம் வரை புரதம் இருக்க வேண்டும். மீதம் நார்ச்சத்துகள் உள்ளிட்ட பிற சத்துகள் கொண்டதாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று சொல்லும் நீரிழிவு மருத்துவர்கள், மேலும்…
“என்ன சாப்பிடலாம் என்பதைப் போலவே எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டியது முக்கியம். சிறுதானியங்களை உடைத்து உப்புமா, கிச்சடி போல சமைத்து சாப்பிடலாம். ஆனால், கஞ்சியாகக் குடிக்கக் கூடாது. சிறுதானியங்களின் கஞ்சியாக இருந்தாலும் அது உடனடியாக எனர்ஜியையும் கொடுக்கும். அதேபோல சர்க்கரை அளவையும் உடனே அதிகமாக மாற்றும். கிழங்குகளில் நார்ச்சத்து குறைவாகவும், மாவுச்சத்து அதிகமாகவும் உள்ளதால்தான் பூமிக்குக் கீழே விளைவதை உட்கொள்ளக் கூடாது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
“அதேபோல பழங்களை அளவோடோ, அவ்வப்போதோ உண்பதில் தவறு இல்லை. கனிந்த பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். முக்கனிகள் என்கிற மா, பலா, வாழையிலும் சர்க்கரை அதிகம் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிக்க, சர்க்கரை அளவு குறைந்த பழங்களை மருத்துவரின் அறிவுரைப்படி தினமும் கூட உட்கொள்ளலாம். Diabetic Diet Chart in Tamil
நீரிழிவாளர்கள் ஆறு வேளையாக உணவை உட்கொள்ள வேண்டும் என்கிற அறிவுரையைக் கேட்டிருப்போம். இதில் மூன்று வேளை வழக்கமான உணவும், மீதமுள்ள மூன்று வேளைக்கு சுண்டல், பயறு வகைகள், சாலட், பழங்கள் (சர்க்கரை அளவுடன் இருந்தால்) சாப்பிடலாம்” என்று பரிந்துரைக்கிறார்கள். Diabetic Diet Chart in Tamil