பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இந்து மதத்தை சேர்ந்த இரண்டாவது வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக இவர், 2000 முதல் 2010 வரை 10 ஆண்டுகளில் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. தற்போது, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனேரியா அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். danish kaneria accuses shahid afridi
இந்த நிலையில், பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர்கள் சந்தித்த கஷ்டங்கள் குறித்து கருத்தரங்கு அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டேனிஸ் கனேரியா பேசியதாவது, ”பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் நானும் பல கஷ்டங்கள், வேறுபாடுகளை சந்தித்தேன். பாகிஸ்தான் அணியில் எனக்கு உரிய மரியாதை கொஞ்சம் கூட கிடைக்கவில்லை.

நான் வேற்று மதத்தை சேர்ந்தவன் என்பதுதான் அதற்கு காரணம். தற்போது நான் அமெரிக்காவில் வசித்து வருகின்றேன். நான் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, அணி கேப்டனாக இருந்த இன்சாமம் உல் ஹக் எனக்கு முழு ஆதரவை தந்தார். என்னிடம் நல்லமுறையில் நடந்து கொண்ட ஒரே கேப்டன் அவர் மட்டும்தான். இதேபோல் சோயிப் அக்தரும் எனக்கு ஆதரவாக இருந்தார். danish kaneria accuses shahid afridi
ஆனால் சையது அப்ரிடி உள்ளிட்ட மற்ற பாகிஸ்தான் வீரர்கள் என்னுடன் சேர்ந்து உணவு சாப்பிட கூட மாட்டார்கள் . குறிப்பாக சையது அஃப்ரிடி என்னை பலமுறை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற கூறினார். ஆனால் இன்சமாம் என்னிடம் அப்படி ஒரு முறை கூட என்னிடம் பேசியது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.