விமானத்தை கடத்துவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், ரயிலை ஹைஜாக் செய்வது அரிது. தற்போது, பாகிஸ்தானில் ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்தியது போலவே 100 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிலும் ரயிலை கடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதான் உலகின் முதல் ரயில் கடத்தல் சம்பவம் ஆகும். When bandits hijacked luxury train
கடந்த 1923 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி ஷாங்காய் நகரில் இருந்து பெய்ஜிங்குக்கு பெர்கிங் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில், ஏராளமான வெளிநாட்டு பயணிகளுடன் 300 பயணிகள் இருந்தனர். ஹெபோ மாகாணத்தில் லின்செங் பகுதியில் ரயில் வந்த போது, தண்டவாளம் தகர்க்கப்பட ரயில் தடம் புரண்டது.
இந்த சமயத்தில் கொள்ளையர்கள் ரயிலில் இருந்தவர்களை சிறை பிடித்தனர். முதல் வகுப்பில் பயணித்த வெளிநாட்டவர்களிடத்தில் இருந்து பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர், 300 பயணிகளும் அருகேயிருந்த மலைபகுதிதிக்கு கொண்டு சென்று அடைத்து வைக்கப்பட்டனர்.

சீன அரசு பல்வேறு விஷயங்களில் தடுமாறிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. அரசியல் நிலைத்தன்மை அப்போது, அந்த நாட்டில் இல்லை. ரயிலை கடத்திய கொள்ளையர்கள் ஷான்டாங் மீட்பு ராணுவத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், பொதுமக்களுக்காக முதலில் போராடி வந்தனர். ‘கொள்ளையர்களாக மாறுவது எங்கள் நோக்கமல்ல. ஆனால், இந்த அரசால் எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்’ என ஷான்டாங் விடுதலை ராணுவத்தினர் சொன்னதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஷான்டாங் என்பது சீனாவிலுள்ள மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.When bandits hijacked luxury train
பிணைக்கைதிகள் ஒரு மாத காலம் மலைபகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர், அப்போதே 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து மீட்கப்பட்டனர். கடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு சீனாவில் ரயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அப்போது, இந்த ரயில் பயணிகள் கடத்தப்பட்ட சம்பவம் உலக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்போது முதல் உலகில் 7 ரயில் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தியாவிலும் கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி டெல்லி புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் கடத்தப்பட்டது. அங்குள்ள மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் பன்ஸ்டலா ரயில் நிலையத்தில் ஆயிரம் பயணிகளுடன் அந்த ரயிலை கடத்தியதாக மாவோயிஸ்ட்கள் அறிவித்தனர். பின்னர், 150 சி.ஆர்.பி.எப் படைவீரர்களுடன் சேர்ந்து ஜார்கண்ட் போலீசார் ரயிலை மீட்டனர்.