தவெகவைச் (TVK) சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கப்படுவதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்தான் கட்சியை விட்டு நீக்கப்படுவதாகவும் சிபிஎம் (CPM) முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக பாலபாரதி தமது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண். தவெகவைச் சேர்ந்தவர். அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் குற்றவாளிகள். அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள். இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA. இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம். குற்றவாளிகளை கைது செய்தது தவெக அரசாங்கம்..நல்லது.
இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்து படித்திருப்பீர்கள்.
ஆனால் பாருங்கள் …
பாலியல்குற்றவாளிகளாக மாறியவர்களை தவெக-விலிருந்து அக்கட்சிநீக்கவில்லை. அவர்களைப்பாதுகாத்த தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கையில்லை.. அடடா என கவலைப்படுகிறீர்களா? படாதீர்கள்…
அதற்குபதிலாகபாதிக்கப்பட்ட அப்பெண்ணை தவெகவிலிருந்து நீக்கி உள்ளார்கள்… இது யார் சொன்னது? அந்தப் பெண்ணே தான்..! ஊர் ஸ்ரீவைகுண்டம்: பெயர்: சரவணன் எம்எல்ஏ தவெக.. இது ஒரு “குட்டி” ஸ்டோரி அல்ல…! குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல.
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடக வாயிலாகஉழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை… !. இவ்வாறு பாலபாரதி தெரிவித்துள்ளார்.
