அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது : நீதிபதி வேதனை!

Published On:

| By Kavi

Court time is being wasted

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்களால் செலவிட முடிவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. Court time is being wasted

நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க அரசுக்கு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சங்கர் ஷா, குமரேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 28) நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரி நிறைவேற்றாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு அரசு சார்பில்,  வாக்காளர் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணியில் அந்த அதிகாரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதை கேட்ட நீதிபதி,  அரசு அதிகாரிகள் எல்லா நேரமும் வாக்காளர் சரிபார்க்கும் பணிகளை செய்கிறார்களா என்ன?. இதுபோன்று நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தார். 

மேலும் அவர்,  “அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளில் 60 சதவிகித நேரமும், அரசியல்வாதிகளின் வழக்குகளால் 25 சதவிகித நேரமும் செலவாகிறது.  பொதுமக்கள் சம்பந்தமான வழக்குகளுக்கு 7 சதவிகித நேரம் மட்டுமே கிடைக்கிறது.  Court time is being wasted

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுகிறது.  பொதுமக்களுக்கு பணி செய்வதுதான் தங்கள் கடமை என்பதை அரசு அதிகாரிகள் மறந்துவிடுகின்றனர்.  அலட்சியமாக வேலை செய்யும் அதிகாரிகளால் தான் நீதிமன்றங்களின் பணி சுமையும் அதிகரிக்கிறது. அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.  

பணி சுமை, நேரமின்மை எனக்கூறி, பணியில் இருந்தும் கடமையில் இருந்தும் அதிகாரிகள் விலகி செல்ல முடியாது.  அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்தால் மக்கள் ஏன் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை நாடப்போகிறார்கள்? ” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி வேல்முருகன். 

இதற்கு அரசு தரப்பில்,  இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதை ஏற்க மறுத்த நீதிபதி,  கடமை தவறிய அரசு அதிகாரிகளுக்கு எந்த வித கருணையும் காட்ட முடியாது. கருணை காட்டினால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவார்கள். இவ்வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். 

வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். Court time is being wasted

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share