அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் பிற அரசு துறைகளில் ஊழல் நடப்பது, ஒட்டுமொத்த விசாரணை இயந்திரத்தையும் உலுக்குகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. Corruption In ED CBI
ராஜஸ்தானின் பன்ஸ்வாராவைச் சேர்ந்த ஹிமான்ஷு நானாவதி சிபிஐயில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், என் மீதான இரண்டு வழக்குகளை முடித்து வைக்க சிபிஐ அதிகாரி என்று கூறி அவ்னிஷ் குமார் என்பவர் என்னை அணுகினார். அவர் சிபிஐயின் மூத்த சட்ட அதிகாரி அனில் தன்வாரிடம் அறிமுகப்படுத்தினார். அனில் தன்வார், என் மீதான வழக்கில் எனக்கு சாதகமாக முடிவு வர வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதேசமயம் ரமேஷ் குமார் என்பவரும் தன்னை சிபிஐ அதிகாரி என கூறிக்கொண்டு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை அதிகாரியான ஜோதிமோன் தேதன் மற்றொரு விவகாரத்தில் ரூ.50000 லஞ்சம் கேட்டார்” என்று கூறியிருந்தார். Corruption In ED CBI
இந்த புகாரின் பேரில், அவ்னிஷ் குமார், டெல்லி சிபிஐ மூத்த சட்ட அதிகாரி அனில் தன்வார், சிபிஐ, பிஎஸ்&எஃப்பி ஆய்வாளர் ரமேஷ் குமார், வருவாய் துறை அதிகாரி ஜோதிமோன் தேதன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. Corruption In ED CBI
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா இன்று (ஏப்ரல் 8) விசாரித்தார். அப்போது அவர், ”சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் பிற துறைகளில் பரவலாக நடைபெறும் ஊழல் தொடர்பான வழக்குகளில் இதுவும் ஒன்று. இதுபோன்று ஊழல் நடப்பது குற்ற விசாரணைகளை முதன்மையாகக் கொண்ட நமது நிர்வாகக் குழு மற்றும் புலனாய்வு இயந்திரத்தின் முழு அமைப்பையும் உலுக்குகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மையை வெளி கொண்டு வர இவர்களிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்று கூறி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா. Corruption In ED CBI