காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்திய ’ரியாக்ஷன்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும் 1 ராஜ்யசபா இடமும் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மார்ச் 4-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது திமுகவின் டிஆர் பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழு, கனிமொழி எம்.பி மற்றும் காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் உடன் இருந்தனர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு காரில் ஏறும் போது முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் காட்டிய ரியாக்ஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
வீடியோ:
