கரூர் நகரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று (செப்டம்பர் 28) கடை அடைக்கப்படுவதாக கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
“கரூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் பரப்புரை வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. பரப்புரை மேற்கொண்ட போது அங்கு குழுமியிருந்த மக்கள் அதிக கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சுமார் 39 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இச்செய்தி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த துயரச் சம்பவதிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மருத்துவமனையில் உள்ளவர்கள் உடல் நலம் பெற பிரார்த்தித்துக் கொள்கிறோம். 28.9.2025 ஞாயிற்றுக்கிழமை அனைத்து வணிக நிறுவனங்களும் முழு கடையடைப்பு நடத்தி நமது இரங்கலை தெரிவிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.