திருச்சி சென்றடைந்தார் ஸ்டாலின்- கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்கிறார்.. ரூ10 லட்சம் நிவாரணம்- விசாரணை கமிஷன்!

Published On:

| By Kavi

விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்று கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தலைமை செயலகத்துக்கு சென்று தலைமை செயலாளருடன் ஆலோசனை செய்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோருடன் கரூர் புறப்பட்டார். தற்போது திருச்சியை சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக கரூர் சென்று கொண்டிருக்கிறார்.

இந்தசூழலில் உயிரிழந்த 36 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர்.

ADVERTISEMENT

மேலும் “இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்” எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share