வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

Published On:

| By Kavi

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (நவம்பர் 1) குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கும் வகையில், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4.50 முதல் ரூ.6.50 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1,754.50 இல் இருந்து ரூ.4.50 குறைந்து, தற்போது ரூ.1,750.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • டெல்லி: ரூ. 1,595.50 இல் இருந்து ரூ.5 குறைந்து ரூ.1,590.50 ஆக உள்ளது.
  • கொல்கத்தா: ரூ. 1,700.50 இல் இருந்து ரூ.6.50 குறைந்து ரூ.1,694.00 ஆக உள்ளது.
  • மும்பை: ரூ. 1,547 இல் இருந்து ரூ.5 குறைந்து ரூ.1,542.00 ஆக உள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் அந்நியச் செலாவணி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைப்பது வழக்கம்.

ADVERTISEMENT

இருப்பினும், 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையை பொறுத்தவரை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50 ஆகவே தொடர்ந்து நீடிக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share