வருஷம் 16 : தோனிக்காக ‘சண்டை’ செய்த மும்பை… வீடியோ உள்ளே!

Published On:

| By Manjula

Chennai super kings dhoni

கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை அணியின் அடையாளமாக இருந்து வரும் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டு, இன்றுடன் (பிப்ரவரி 20) 16 வருடங்கள் முடிவுக்கு வந்துள்ளன. Chennai super kings dhoni

இதையொட்டி தங்களது கேப்டன் தோனியை வாழ்த்தி சென்னை அணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”16 வருடங்கள் 1 பெயர். ஆனால் அனைத்தும் முடிந்ததா”, என எழுதப்பட்டு இருக்கிறது.

மற்றொரு புகைப்படத்தில், ”16 வருடங்களுக்கு முன் எங்களின் பெருமிதம் தொடங்கியது. முதல் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. மீதி நடந்தது வரலாறு”, என தோனியுடன் மற்ற வீரர்களையும் இணைத்து வெளியிட்டு இருக்கிறது.

இதையடுத்து முன்னாள்-இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் போட்டிபோட்டு தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தோனியை ஏலத்தில் எடுக்க சென்னை-மும்பை அணிகள் முட்டிமோதிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

கடைசி வரை சண்டை செய்த மும்பை அணி தோனியின் விலை உயர்ந்து கொண்டே சென்றதால், ஒருகட்டத்தில் விலக, சென்னை அணி தோனியை ஏலத்தில் எடுத்து தங்களின் கேப்டனாக்கியது. அன்று தொடங்கி இன்று வரை சென்னையின் கேப்டனாக தோனியே இருந்து வருகிறார்.

ஏற்கனவே சொன்னது போல அவருடன் கேப்டனாக ஐபிஎல் விளையாடிய வீரர்கள், அவருக்கு பிறகு கேப்டன் ஆனவர்கள் என அனைவருமே அந்த பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் விலகி விட்டனர்.

ஆனால் 42 வயதிலும் தோனி கேப்டனாகவே சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். உச்சகட்டமாக அவருக்கு 18 வயது இளையவர் சுப்மன் கில்லுடன் இந்த ஐபிஎல் தொடரில் மோதவுள்ளார்.

chennai super kings dhoni

அதோடு இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதால் கோப்பையுடன் அவர் விடைபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

அந்த இனிய தருணம் நனவாகுமா? என்பதை நாம் காத்திருந்தே பார்க்கலாம்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐந்து மாநிலங்களில் போட்டி: டெல்லியில் திருமாவளவன் பேட்டி!

TN Agri Budget: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி!

Chennai super kings dhoni

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share