கோவை வடக்கு ரயில் நிலையத்தில் பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வரும் செப்டம்பர் 7ம் தேதி சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில்,
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
போத்தனூர் ஜங்ஷனிலிருந்து செப்டம்பர் 7ம் தேதி காலை 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு, ரயில் (எண் – 66612 ) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் (எண் 66615 ) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள்
ஆலப்புழாவிலிருந்து வரும் 7ம் தேதி காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 13352 ) போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும், கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்காது. மாற்று நிறுத்தமாக போத்தனூர் ஜங்ஷனில் நிற்கும்.
எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து செப்டம்பர் 7ம் தேதி காலை 9.10 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் – KSR பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் – 12678 ) போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்காது. மாற்று நிறுத்தமாக போத்தனூர் ஜங்ஷனில் நிற்கும்.
திருநெல்வேலியிலிருந்து வரும் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண் – 22620 ) போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும், கோயம்புத்தூர் ஜங்ஷனில் நிற்காது. மாற்று நிறுத்தமாக போத்தனூர் ஜங்ஷனில் நின்று செல்லும்.