மீண்டும் புதிய உச்சம்… ரூ.79,000த்தை நெருங்கிய தங்கம் விலை!

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Sep 2025, 12:44 PM

gold and silver price on 5 september 25 in chennai

பணவீக்கம், போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 5) ஒரு கிராமுக்கும் ரூ.70 வரை உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று (செப்டம்பர் -5) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று (செப்டம்பர் -5) மூன்றாவது நாளாக மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

நேற்யை தங்கம் விலை

தங்கம் விலை நேற்று (செப்டம்பர் – 4) ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795க்கும், ஒரு சவரன்  தங்கம் ரூ.80 குறைந்து ரூ.78,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel