தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
சென்னையில் காற்று மாசு தரக் குறியீட்டு எண் தீபாவளிக்கு முன்பாக 80 ஆக இருந்தது. தீபாவளி நாளில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடித் தீர்த்தனர். இதனால் காற்று மாசுபாடு தரக் குறியீட்டு எண் கிடுகிடுவென இரண்டு மடங்காக அதிகரித்து 154 ஆக உயர்ந்தது.
சென்னையை அடுத்த பெருங்குடியில் உச்சபட்சமாக 217 ஆகவும் மணலி- வேளச்சேரியில் 151 ஆகவும் பதிவாகின.
காற்று மாசு தரக் குறியீட்டு எண்ணில் சற்று குறைவாக ஆலந்தூரில் 128 ஆக பதிவாகி இருந்தது.
2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு தரக் குறியீட்டு எண் 287 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
