பட்ஜெட் எதிரொலி – அதிரடியாய் குறைந்த தங்கம் வெள்ளி விலை – எவ்வளவுனு பாருங்க?

Published On:

| By Kavi

பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், அதன் விலை 50 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதன் காரணமாக தங்கம் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்றைய நிலவரப்படி 22 கேரட் கொண்ட 8 கிராம் தங்கம் 54,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6,825க்கு விற்பனையானது.

இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550 விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ஒரு சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து 52,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.92.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோவுக்கு 3,500 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.92,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வெள்ளி விலை அதிரடியாக குறைந்திருப்பது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பெண்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி… உழைக்கும் மகளிருக்கு விடுதி!

பட்ஜெட்டில் இடம்பெறாத தமிழ்நாடு : தலைவர்கள் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share