கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ ஜெல்லி

Published On:

| By Selvam

எங்கே பார்த்தாலும் கண்களைக் கவரும் வகையில் நாவல் பழங்கள் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நாவல் பழத்தில், சுவையான ஜெல்லி செய்து இந்த வார வீக் எண்டை நாவல் பழ ஸ்பெஷலாக்குங்களேன்.

என்ன தேவை?

ADVERTISEMENT

ஜெலட்டின் – 20 கிராம் (2 சிறிய பாக்கெட்)
சர்க்கரை – ஒரு கப்
நாவல் பழச்சாறு – அரை கப்
கடைந்த பாலேடு – அரை கப்
வறுத்த விருப்பமான நட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது)
நாவல் பழத் துண்டுகள் – கால் கப்
வெண்ணெய் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஜெலட்டினை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சிறு தீயில் வைத்து ஜெலட்டினை கரையவிட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரையவிட்டு இறக்கி, ஆற விடவும். இதனுடன் ஜெலட்டின் கரைசல், நாவல்பழச்சாறு சேர்த்துக் கலக்கவும்.

விரும்பிய அச்சில் சிறிதளவு வெண்ணெய் தடவி ஜெலட்டின் – நாவல் பழச்சாறு கரைசலை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஆறு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து துண்டுகளாக்கவும். பாலேட்டுடன் வறுத்த நட்ஸ், ஜெல்லித் துண்டுகள், நாவல்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறலாம். ஜெல்லியை அப்படியேவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ஃப்ரெஷ் கோகனட் பிஸ்தா க்ரீம் வித் ஹோல் ஸ்ட்ராபெர்ரி  

கிச்சன் கீர்த்தனா: மஞ்சள் சோயா மில்க்

அப்டேட் குமாரு

டிஜிட்டல்  திண்ணை: புதிய மேயர்கள் யார்?  ஸ்டாலின் போடும் கணக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share