அதிக அளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது சோயா மில்க். இந்த மஞ்சள் சோயா மில்க், மாறி வரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதாகும் அமையும். வளரும் குழந்தைகளுக்கும் ஏற்ற சிறந்த பானமாகவும் விளங்கும்.
என்ன தேவை?
சோயா மில்க் – 2 கப் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்)
தேன் அல்லது பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்சாறு (பசுமஞ்சளை அரைத்து சாறு எடுக்கவும்) – 2 டீஸ்பூன்
இஞ்சிச்சாறு – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
சோயா மில்க்கை வெதுவெதுப்பாகச் சூடாக்கவும். அதில் மற்ற பொருள்களைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு வடிகட்டவும். இத்துடன், வீட்டிலேயே தயார் செய்த சாக்கோ வால்நட் குக்கீஸைப் பரிமாறலாம்.
200 ரூபா பட்ஜெட்… அப்டேட் குமாரு
நிலச்சரிவுக்கு பிறகே மத்திய அரசு எச்சரிக்கை… அமித்ஷாவுக்கு பினராயி பதில்!