சென்னையயை அடுத்து திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் இந்திய விமானப்படையின் விமானப்படை பயிற்சித் தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கான விமானம் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இங்கிருந்து நேற்று பிற்பகலில் ‘பிளேட்டஸ் பி.சி.,7 மார்க் II’ ரக பயிற்சி விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தை சுபம் என்பவர் இயக்கினார். இந்நிலையில் திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சித்தார். அதுமுடியாமல் போகவே விமானி சுபம் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விமானம் புறவழிச் சாலையில் உள்ள உப்பளம் பகுதியில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து தாம்பரம் விமானப்படை அதிகாரிகள் மீட்புக் குழுவினருடன் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்துக்கான குறித்து காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான விபத்து நடத்த இடத்தில் கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெற்றது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு பிறகு விபத்திற்கான காரணம் தெரியவரும்.
