‘அழகு ஆர்த்தி’ : பாராட்டிய விக்னேஷ் சிவன்

Published On:

| By Jegadeesh

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

ADVERTISEMENT

திருமணத்தின் போது நயன்தாரா அணிந்து இருந்த உடை மற்றும் அணிகலன்கள் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியது. அதுமட்டுமல்லாமல், பலர் நயன்தாரா போன்று உடை அணிந்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்தனர்.

https://twitter.com/VigneshShivN/status/1558076209547788288?s=20&t=UB5VqmpUiIswjaMd5yS9_Q

இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி நயன்தாராவின் திருமண உடை போன்று ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு “என்ன கொடுமை இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் ” நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவிற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

விமர்சனத்தைச் சந்தித்த அமீர்கான் படம்: வசூலை குவிக்குமா?

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share