WTC FINAL : ரபாடா சாதனையால் பும்ராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

Published On:

| By christopher

bhumrah gets outrage after rabada fifer in wtc 25

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 11) தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்து இருக்கிறார். bhumrah gets outrage after rabada fifer in wtc 25

தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை பின் தள்ளி அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா பவுலர்களில் ஆலன் டொனால்ட் மற்றும் நிட்டினியை தொடர்ந்து மூன்றாவது வீரராக இடம்பிடித்துள்ளார்.

அதே போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் மேல் எடுத்த பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் உடையவராக மாறியிருக்கிறார் காகிசோ ரபாடா.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பவுலர் பும்ரா 64 விக்கெட்டுகளை 39.9 என்ற பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டில் வீழ்த்தியது தான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை 38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் முறியடித்துள்ளார் ரபாடா.

இதெற்கெல்லாம் மேலாக தற்போது நடைபெற்று வரும் பைனலில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பும்ரா அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாததை குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share