ADVERTISEMENT

கொழுப்பு கல்லீரல் டயட் : லிவரை சுத்தப்படுத்தும் 7 சிறந்த உணவுகள் இதோ..!

Published On:

| By Santhosh Raj Saravanan

best foods to liver cleansing and reduced Fatty liver

கொழுப்புக் கல்லீரல் பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கு ஏழு சிறந்த உணவு முறைகளை விரிவாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் கல்லீரலுக்கு முக்கிய பங்கு உள்ளது. பொறித்த, பதப்படுத்திய உணவுகளை சாப்பிடுவது, முறையற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, மதுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக வாழ்க்கை முறை பிரச்னைகளில் ஒன்றாகவே பேட்டி லிவர் எனப்படும் கொழுப்புக் கல்லீரல் மாறிவிட்டது. அதே சமயம் பலரும் தங்களுக்கு பேட்டி லிவர் பிரச்னை இருப்பதை உணரவில்லை. ஏனெனில் பேட்டி லிவர் எந்தவித அறிகுறியையும் உடலில் காட்டுவதில்லை. வேறு ஏதேனும் பரிசோதனைக்குச் சென்று ஸ்கேன் எடுக்கும்போதுதான் கொழுப்புக் கல்லீரல் பிரச்னை தெரியவருகிறது.

கொழுப்புக் கல்லீரலில் இரண்டு வகைகள் உள்ளன. மது இல்லாத கொழுப்புக் கல்லீரல் என்பது மோசமான உணவுப் பழக்கத்தால் ஏற்படுகிறது. மது கொழுப்புக் கல்லீரல் நீண்ட காலமாக அல்லது அதிக மது அருந்துவதால் ஏற்படுகிறது.
அதே சமயம் நமது அன்றாட வாழ்க்கையில் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலமாக கொழுப்புக் கல்லீரலில் இருந்து விடுபடுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். கல்லீரல் கொழுப்பைக் குறைத்து அதனை சுத்தப்படுத்தும் உணவுகளின் பட்டியலை காண்போம்.

ADVERTISEMENT

கீரை வகைகள்

பசலைக் கீரை, பரட்டைக் கீரை ( kale), வெந்தயக் கீரை, லெட்யூஸ் கிரை ஆகிய கீரை வகைகள் கல்லீரலில் கொழுப்பு சேருவதை குறைப்பதோடு, நச்சு நீக்கம் செய்யவும் உதவுகிறது. இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்துகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. கல்லீரலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளில் இருந்து பாதுகாக்கிறது. நாள்தோறும் ஒருவேளை கீரை சேர்த்துக்கொள்வது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

பழங்கள்

ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் பெர்ரி ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. திராட்சையில் உள்ள நரிங்கெனின், நரிங்கின் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரல் ஃபைப்ரோஸிஸின் (hepatic fibrosis) வளர்ச்சியைக் குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தானியங்கள்

பழுப்பு அரிசி, ஓட்ஸ், குயினோவா மற்றும் திணை வகைகள் உடலுக்கு நிலையான ஆற்றலை வழங்குவதோடு கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கின்றன. உயர் நார்ச்சத்துள்ள தானியங்கள் கொழுப்புக் கல்லீரலை குறைக்க உதவுவதோடு, ரத்தத்தின் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் துணை புரிகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள்

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், விதைகள், அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களை வழங்குகின்றன. வறுத்த, பொறித்த ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக இவற்றை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

பூண்டு மற்றும் இஞ்சி

இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்க உதவுகின்றன. இஞ்சி, பூண்டு இரண்டையும் சூப், பொரியல் அல்லது காலை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ

கேட்டசின்கள் நிறைந்துள்ள கிரீன் டீ கொழுப்பு கல்லீரல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.மது இல்லாத கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கும்போது, கல்லீரல் என்சைம்கள் அளவைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 1-2 கப் க்ரீன் டீ சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதிகமான தண்ணீர் அருந்துதல்

தினமும் 12–15குவளை தண்ணீர் குடிப்பது நச்சுகளை வெளியேற்றவும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இளநீர் குடிப்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கும் மற்றொரு சிறந்த வழியாகும். சரியான உணவுத் தேர்வுகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூலம் கொழுப்பு கல்லீரலை நிர்வகிக்கலாம், வருவதற்கு முன்பே தடுக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share