கோடைக் காலத்தில் சூப்பர் ஃபுட் தயிர்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Benefits of eating Curd in summer and its nutrients

கோடைக் காலத்தில் தினமும் உணவில் தயிர் (Curd) சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், இன்னும் சில வாரங்களில் வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும். கோடையில் சுட்டெரிக்கும் வெயில் நமது ஆற்றலை குறைப்பதோடு, செரிமான மண்டல இயக்கத்தையும் மெதுவாக்குகின்றன. ஆகவே, உடலுக்கு குளிர்ச்சியான, செரிமானமாகும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

ADVERTISEMENT

குறிப்பாக கோடைக் காலத்தில் தயிர் எடுத்துக் கொள்வது பல்வேறு விதங்களில் உடல்நலனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தயிர் (daily eat curd benefits) நமது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் முக்கியமான ஊட்டச் சத்துகளைக் கொண்டுள்ளது. உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது உடலை சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்கிறது.

தயிரில் (Curd) உள்ள சத்துக்கள்:

தயிரில் கால்சியம், வைட்டமின் பி12 (Vitamin B12), பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதோடு எலும்பு மற்றும் பல் வலிமையை அதிகரிக்கிறது. தினமும் தயிர் சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (Osteoporosis disease) ஆபத்தையும் குறைக்கிறது.

ADVERTISEMENT

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

தயிரில் இயற்கையான புரோபயாடிக்குகள் (Probiotics) நிறைந்துள்ளன. இவை நல்ல பாக்டீரியாக்களாக செயல்பட்டு நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக (Digestive system health) வைத்திருக்க உதவுகின்றன. தயிர் கெட்ட பாக்டீரியாக்களை குறைத்து செரிமானத்தை எளிதாக்குகின்றன. இதனால் வாயுத் தொல்லை, அஜீரனம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் கோடைக் காலத்தில் குறைகின்றன. தினமும் தயிர் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது:

தயிரில் உள்ள புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது நீண்ட நேரம் பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் குறைக்கிறது. இதன்மூலம் உடல் எடை  (Weight loss) குறைவதற்கு பங்களிப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தயிர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொழுப்பை குறைக்கவும் உதவி புரிகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share