ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவரும் மகளிர் கிரிக்கெட் 2024 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் வங்கதேச அணியும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றிபெற்றன.
வங்கதேசம் – ஸ்காட்லாந்து
மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 ஷார்ஜாவில் நேற்று தொடங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்கிய முதல் போட்டியில் வங்கதேச அணி ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கை தேர்வு செய்தார். இது அவரது 100வது டி20 போட்டி ஆகும்.
தொடக்க வீரர்களான ஷாத்தி ராணி 29 ரன்னும் முர்ஷிதா காதூண் 12 ரன்னும் எடுத்த அவுட்டானார்கள்.
இவர்களுக்கு அடுத்துக் களமிறங்கிய சோபனா மோஸ்தரி 36 ரன்கள் எடுத்தார். ஆனால் கேப்டன் நிகர் சுல்தானாவால் 18 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.
முதல் இன்னிங்ஸின் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை வங்கதேச அணி எடுத்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் சஸ்கியா ஹோர்லி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 120 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொண்டு களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் சஸ்கியா ஹோர்லி 8 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஆனால் மறுமுனையில் ஆடிய சாரா பிரைஸ் சிறப்பாக விளையாடி 49 ரன் கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர்களுக்குப் பின் வந்த மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களில் அவுட்டானர்கள்
இதனால் ஸ்காட்லாந்து அணியால் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன் கள் எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிப்பெற்றது.
வங்கதேச அணி இதற்கு முன் நடந்த 16 உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் வங்கதேச அணியின் வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.
பாகிஸ்தான் – இலங்கை போட்டி
இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்குப் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான முனீபா அலி மற்றும் குல் ஃபெரோஸா சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய சித்ரா அமீன் மற்றும் ஒமைமா சொஹைல் நிதானமாக ஆடினார்கள். சித்ரா அமீன் 12 ரன்களிலும், ஓமைமா 18 ரன்களிலும் அவுட்டானார்கள்.
இதன் பின் வந்த பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இலங்கை சார்பில் உதேஷிகா, சுகந்திகா மற்றும் சமரி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாததால் 9 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் சார்பில் ஃபாத்திமா 2 விக்கெட், சதியா 3 விக்கெட், ஒமைமா 2 விக்கெட் மற்றும் நஷரா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விருது வழங்கி பி.சுசீலாவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஸ்டாலின்
சனாதனம் : பவன் கல்யாணின் எச்சரிக்கை… உதயநிதி பதில்!
திருப்பதி லட்டு விவகாரம் : ’சிறப்பு புலனாய்வுக் குழு’ அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!