மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை!

Published On:

| By christopher

Ban on parking vehicles in metro stations!

சென்னை மாநகரில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையங்களைச் சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ, அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் அக்டோபர் 17 வரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரங்கிமலை மெட்ரோ நிலையத்தை இணைக்கும் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து பரங்கிமலை மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்திலுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பரங்கிமலை மெட்ரோ நிலையத்தை சென்றடைய இயலாத பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோயம்பேடு புறநகர் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் பயணிகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோஹிணி திரையரங்கம் பக்கத்திலுள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மெட்ரோ ரயில் நிலைய பயணிகள் உதவி எண்: 1800 425 1515. பெண்களுக்கான உதவி எண் – 155370. மேற்கண்ட எண்களில் தொடர்புகொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஒளிரும் தேகத்துக்கு இதெல்லாம் சாப்பிடுங்க!

ஹெல்த் டிப்ஸ்: அதிகரிக்கும் கொசுத்தொல்லை… இயற்கை முறையில் விரட்ட இதோ வழி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share