ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை!

Published On:

| By Kavi

Ban on handing over Jayalalithaa's jewels

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் 468 வகையான 7,040 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், 700 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள், 740 விலையுயர்ந்த காலணிகள், 11,344 பட்டுப் புடவைகள், 250 சால்வைகள், 12 குளிர்சாதனப் பெட்டிகள், 10 டிவிகள், 8 விசிஆர் எனப்படும் நீராவி சுருக்க குளிர்பதனக் கருவிகள், 1 வீடியோ கேமரா, 4 சிடி பிளேயர்கள், 2 ஆடியோ டிஸ்க்குகள், 24 டூ இன் ஒன் டேப் ரெக்கார்டர்கள், 1,040 வீடியோ கேசட்டுகள், 3 இரும்பு லாக்கர்கள், ரூ.193,202 ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த பொருட்கள் தற்போது கர்நாடகா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எல்லாம் ஏலம்விட்டு அதில் வரும் நிதியை வைத்து சொத்துக் குவிப்பு வழக்கிற்குச் செலவு செய்த தொகையை ஈடு செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ”ஜெயலலிதாவின் நகைகளைத் தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூ. 5 கோடியை தமிழக அரசு கர்நாடகத்துக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ஜெயலலிதா இல்லத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மார்ச் 7ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான வேலைகளும் நடந்து வந்தன.

இதனை பெற்றுக்கொள்ளத் தமிழ்நாடு உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் பெங்களூரு செல்ல இருந்தனர்.

ADVERTISEMENT

இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், ஜெயலலிதாவின் நகைகளுக்கு உரிமை கோரியும், தமிழக அரசிடம் நகைகளை ஒப்படைக்கக் கூடாது என்றும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கக் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் நகைகளைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

உக்ரைன் – பாலஸ்தீனப் போர்கள்..நொறுங்கும் அமெரிக்க ஆதிக்கம்..இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1

’திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் இவர் தான்’ : அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share