ADVERTISEMENT

ஆயுதபூஜை விடுமுறை… நெல்லை, மதுரையில் இருந்து சென்னைக்கு திரும்ப சிறப்பு ரயில்கள்!

Published On:

| By christopher

ayudha pooja special trains for nellai and madurai

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்களை இன்று (அக்டோபர் 3) அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வாரயிறுதி விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் பல இடங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர்கள் மீண்டும் சென்னை, கோவை ஆகிய பணியிடங்களுக்கு செல்ல வசதியாக தெற்கு ரயில்வே சிற்ப்பு ரயில்களை இன்று அறிவித்துள்ளது.

நெல்லை – தாம்பரம்!

அதன்படி நெல்லை – தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அக்டோபர் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

நெல்லையிலிருந்து 17 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06014), கோவில்பட்டி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மதுரை – தாம்பரம்!

அதேபோன்று மதுரை – தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் அக்டோபர் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மதுரையிலிருந்து 12 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06162), மறுநாள் திங்கள் கிழமை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share