கரூரில் 2 ஆவது நாளாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டம் கடந்த செப்டம்பர்-27ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் கரூர் வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்றும் 2 ஆவது நாளாக சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் வீட்டிலும் நேரில் சென்று நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார்.