கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய்யை கைது செய்ய கோரி சென்னை மாநகரின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டை முற்றுகையிட்டு தமிழக மாணவர் மன்றத்தினர் நேற்று (செப்டம்பர் 28) போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மாநகரின் பல இடங்களில் தமிழக மாணவர் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.