ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதுவரை ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், ராமு, ரவுடிகள் திருவேங்கடம், திருமலை, பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், அருள், பொன்னை பாலு உள்ளிட்டோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் ஆவார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை கட்சியிலிருந்து நீக்கியதாக காங்கிரஸ் அறிவித்தது.
தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய நிலையில், அவரை ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்ப்படுத்தவில்லை என்றால்… : நீதிமன்றம் எச்சரிக்கை!
”தகுதியிழப்பால் உங்கள் சாதனையை குறைக்க முடியாது”: வினேஷ்க்கு ஸ்டாலின், உதயநிதி ஆறுதல்!