ஆம்ஸ்ட்ராங் கொலை… 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!

Published On:

| By Kavi

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி புண்ணை பாலு உள்ளிட்ட 8 பேர் சம்பவம் நடந்த அன்று இரவே சரணடைந்தனர்.

அவர்களை தொடர்ந்து மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தற்போது பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

கொலைக்கான பின்னணியில் இருப்பது யார்? சட்ட உதவி செய்தது யார்? நிதியுதவி செய்தது யார்? உள்ளிட்ட விவரங்கள் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போதுதான் தெரியவரும். 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை காணொளி மூலம் ஆஜர்ப்படுத்த போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் நீதிமன்றமும் அனுமதியளித்திருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிரியா

ஓடிடியில் திரிஷா… நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

5 வருட தடைகளை தாண்டி வெளிவரும் இந்தியன் 2 : ரூ.1,000 கோடியை தொடுவாரா கமல்ஹாசன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share