ஓடிடி தளங்களின் வருகையால் தற்போது ரிலீஸ் ஆகும் புதிய படங்கள், விரைவில் ஓடிடியில் வெளியாவது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் வார வாரம் எந்த படம் ஓடிடியில் வெளியாகும், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
அந்தவகையில் இந்த வாரம் என்னென்ன புதுப் படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழில் ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ ஜோதி’, ‘மெமரீஸ்’ மற்றும் ‘பம்பர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை ஈர்த்த வெற்றி நடிப்பில் வெளியான பகலறியான் திரைப்படம் நாளை ஜூலை 12ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.
ப்ளாட் திரைப்படம், ஈடிவி வின் தளத்தில் வரும் 12ஆம் தேதி (நாளை) வெளியாகிறது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படம் மகாராஜா நாளை ஜுலை 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பில் என்ற ஓடிடி தொடர், ஜியோ சினிமா தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.
ஓடிடியில் திரிஷா வெப் தொடர்!
21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும், ‘பிருந்தா’ என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
முதன்முறையாக இணையத்தொடரில் நடித்துள்ள் திரிஷாவின் ‘பிருந்தா’ வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் வெற்றி… அரூருக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!
தேசிய கோபால் ரத்னா விருது-2024