எந்த கட்சி ஆட்சி? திமுக- அதிமுகவுக்கு எத்தனை சீட்? விஜய், சீமானுக்கு எத்தனை இடங்கள்? ANS சர்வே முடிவுகள்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

தமிழ்நாடு தேர்தலில் திமுக கூட்டணி 44.9 வாக்குகளை பெறும் என ANS நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி, மற்றும் புதிதாக கட்சி தொடங்கி உள்ள சசிகலா – ராமதாஸ் கூட்டணியோடு என 5 முனை போட்டி நிலவுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ANS நிறுவனம் (Agni News Services) கடந்த பிப்ரவரி 7 முதல் மார்ச் 12 வரை நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் முதன்முறையாக களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 9.7% வாக்குகளைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சி 4.8% வாக்குகளைப் பெறக்கூடும் என்றும், இதர கட்சிகள் மற்றும் நோட்டா (NOTA) ஆகியவற்றுக்கு 2.1% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share