பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று (மே 11) மாலை தொடங்கி நடைபெற்றது. anbumani ruled over vanniyar sanga manadu
இந்த மாநாட்டில் வட மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்காக வருகை தந்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், மாநாடு திடலுக்கு எதிர்புறம் இருந்த திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ‘கல்டன்’ என்ற ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தார். anbumani ruled over vanniyar sanga manadu

அதற்கு அருகிலுள்ள ஷெல்டன் ஹோட்டலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தங்கியிருந்தார்.
தனித்தனி ஹோட்டல்களில் தங்கியிருந்த இருவருமே, இந்த மாநாட்டிற்காக வந்த கூட்டம், வாகனங்களை தங்களுடைய அறையில் இருந்த டிவி மூலம் இன்று காலை முதல் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாட்டு பணிகளில் அன்புமணியின் குடும்பம் தீவிரமாக பணியாற்றி வந்தது.
குறிப்பாக அன்புமணியின் மூத்த மகள் சங்கமித்ரா பம்பரமாக சுழன்று வேலை செய்தது மாநாட்டு களத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
இன்று ராகு காலத்திற்கு முன்னதாகவே மாநாட்டுக்கு வந்த செளமியா அன்புமணிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதன்பின்னர் காரில் தனது மகள்களுடன் அன்புமணி மேடையேறியதும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. அப்போது வன்னியர் சங்க கொடியை பறக்க விட்டபடி பாராகிளைடர் பறந்து வந்ததை பார்த்து அன்புமணி உட்பட பலரும் ரசித்தபடி உற்சாக குரல் எழுப்பினர்.

தொடர்ந்து ’வாழும் பெரியார் மருத்துவர் அய்யா’ என்ற பெயரில் ஆவணப்படம் மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட டிஜிட்டல் திரையில் திரையிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தொண்டர்களை உற்சாகப்படுத்த, பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தலைமையில் பாமகவின் கொள்கை சார்ந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கிடையே மறைந்த காடுவெட்டி குரு மற்றும் வீரப்பன் ஆகியோரின் முகம் பொறித்த டீசர்டை தொண்டர்கள் பலர் அணிந்து வந்தது கவனிக்க வைத்தது.
தனது மூத்த மகள் காந்தி பரசுராமனின் மகன் முகுந்தனுடன் மேடைக்கு ஏறினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவருக்கு சிறிது இடைவெளி விட்டு அன்புமணி பின் தொடர்ந்தார்.

அப்போது தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பவே, ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மேடையில் இருந்த பட்டனை அழுத்தி வன்னியர் சங்க கொடியை ஒன்றாக ஏற்றி வைத்தனர்.

இந்த மாநாடு முழுக்க முழுக்க அன்புமணியின் கட்டுப்பாட்டில் தொண்டர்களை வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் உற்சாகமான முறையில் நடந்தது தெரிந்தது. மேடையில் பேசிய அனைவரும் அன்புமணிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து பேசியதும் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. anbumani ruled over vanniyar sanga manadu