Operation Sindoor- தீவிரவாதத்தை ஆதரித்தால் பாகிஸ்தான் நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும்- மோடி எச்சரிக்கை

Published On:

| By Minnambalam Desk

பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

  • இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாகவே நாம் வெளிப்படுத்தி வருகிறோம்.
  • நாட்டின் ராணுவ வீரர்களுக்கு தலைணங்குகிறேன்; தீரமிக்க ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீரவணக்கம்.
  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
  • இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளோம்.
  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் பாராட்டுகள்.
  • ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட மத அடிப்படையிலான தீவிரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் தனிப்பட்ட முறையில் எனக்கு கடும் மனவலியைத் தந்தது.
  • ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை
  • பாகிஸ்தானின் பஹவல்பூர், முர்திகே பல்கலைக் கழகங்கள், சர்வதேச தீவிரவாதப் பல்கலைக் கழகங்களாகவே செயல்பட்டன; அவற்றை அழித்துள்ளோம்.
  • தீவிரவாதத்தை முற்றாக அழிக்க நமது ராணுவத்தினருக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் அனைத்தும் நமது வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுவிட்டன.
  • ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல.. நமது உணர்வுகளின் வெளிப்பாடு.
  • தேசத்தின் நலனுக்காகவே ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம்.
  • பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை மட்டுமல்ல.. தீவிரவாதிகளின் நம்பிக்கைகளையும் இந்திய ராணுவம் தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது.
  • இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களால் பாகிஸ்தான் கதிகலங்கிப் போய்விட்டது.
  • இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பதிலடி நடவடிக்கை நியாயமானதே.
  • பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம்களும் தாக்கி அழிக்கப்பட்டுவிட்டன.
  • இந்திய சகோதரிகளின் நெற்றித் திலகத்தை அழித்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்த முகாம்களை இந்திய ராணுவம் அழித்து தரைமட்டமாக்கிவிட்டது.
  • நமது பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் நமது டிரோன்களும் ஏவுகணைகளும் துல்லியமாக தாக்குதல் நடத்தின.
  • நமது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்தான் நம்மை தொடர்பு கொண்டது பாகிஸ்தான்.
  • தீவிரவாதத்தை ஒழிக்கும் கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இருக்கும்
  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகம் அறிய உதவி இருக்கிறது. தீவிரவாதிகளை ஆதரித்த பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலப்பட்டுவிட்டது.
  • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்களிப்பு செய்தன.
  • இந்தியாவின் அதிரடியான கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்தது.
  • பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியாவின் ,முப்படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.
  • இந்தியாவின் மொத்த பலமும் தீவிரவாதத்துக்கு எதிரானதாகவே இருக்கும்
  • இந்தியாவால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி நிகழ்வில் பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்றதை உலகம் பார்த்தது.
  • தீவிரவாதத்தை ஆதரித்தால் பாகிஸ்தான் நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும்.
  • அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா ஒருநாளும் அச்சப்படாது
  • வளர்ந்த இந்தியா என்ற கனவும் நிச்சயம் நிறைவேறும்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளது.
  • இந்தியாவின் முப்படையினரும் பாகிஸ்தானின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகவே கவனித்து வருகின்றனர்.
  • பாகிஸ்தானையும் அதன் தீவிரவாதிகளையும் ஒருபோதும் பிரித்து பார்க்கவே மாட்டோம்
  • இதுவரை பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது
  • தற்போதைய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, இந்திய வரலாற்றில் புதிய மைல் கல்.
  • பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்திவிட வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share