பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. ராமதாஸ் கூட்டிய பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் கூண்டோடு புறக்கணித்தனர்.
இந்தநிலையில், தைலாபுரத்தில் நேற்று (மார்ச் 23) நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “நானும் அன்புமணியும் ஒன்றாக தான் இருக்கிறோம். சிலர் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், ராமதாஸ் என்ன சொல்கிறாரோ அதை செய்வதே எனது கடமை என்று அன்புமணி இன்று (மே 24) தெரிவித்துள்ளார். Anbumani opens up clash with ramadoss
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மஹாலில், மறைந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கனல் இராமலிங்கத்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, “கடந்த ஒரு மாதமாகவே எனக்கு பயங்கர மன உளைச்சல், தூக்கம் இல்லை. எனக்குள் பல கேள்விகளை தினம் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன்? ஏன் கட்சி பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன்?
என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய நோக்கம், லட்சியம், கனவு எல்லாம் ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றுவது தான். வேறு என்ன எனக்கு கனவு இருக்கப்போகிறது? Anbumani opens up clash with ramadoss
இவ்வளவு காலமாக ராமதாஸ் என்ன சொன்னாரோ அதையெல்லாம் செய்து முடித்தவன் . இனியும் என்ன சொல்கிறாரோ, அதையெல்லாம் ஒரு மகனாக, கட்சியின் தலைவராக நிச்சயமாக செய்து முடிப்பேன். அது என்னுடைய கடமை. வரும்காலங்களில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.